மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்பு: மக்கள் மத்தியில் அச்சம். - News View

About Us

About Us

Breaking

Friday, December 1, 2017

மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்பு: மக்கள் மத்தியில் அச்சம்.

மட்டக்களப்பு நாவலடியில் இன்று (02) காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகலிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும் ஏதும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் இவ்வாறு மக்கள் மத்தியில் இன்றும் அச்சநிலையேற்பட்டுள்ளது.

அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடார்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

No comments:

Post a Comment