சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு. - News View

About Us

About Us

Breaking

Friday, December 1, 2017

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு.


நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, 5 பேர் காணாமல்போயுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் தற்போதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, பாதுகாப்பான 30 தற்காலிக வசிப்பிடங்களில் 961 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 509 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment