காசல்ரீ நீர்தேக்கத்தின் கரையோரத்தில் நீராட சென்றவர் நீரில் மூழ்கி பலியானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனராஜா பகுதியிலே இன்று மதியம் 2 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்தேக்கத்தின் கரையோர பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஸமீர் என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த விடுதியில் மூன்று நாட்களாக தங்கியிருந்த மேற்படி நபர் அந்த விடுதிக்கு வந்த வெளிநாட்டு உள்ளாச பயணிகளுடன் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆறு நீர்தேக்கத்துடன் சங்கமிக்கும் பகுதியில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment