பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் அம்பலமாகி இருக்கிறது. இந்த சதி திட்டத்தை தீட்டிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பிரிட்டனில் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் லண்டனை சேர்ந்த சக்காரியா ரகுமான், முகமது ஆகியுப் இம்ரான் ஆகியோர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளது.
அதன்படி அவர்கள் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பிரிட்டனில் இருக்கும் 'வெஸ்ட்மின்ஸ்டர்' நீதிமன்றம் வழியாக பிரதமர் வரும் போது அவர் வாகனத்தில் குண்டு வீச திட்டமிட்டு இருக்கின்றனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment