எதிர்ப்பையும் தாண்டி நடந்து முடிந்த 82 மற்றும் 25 வயதுடைய காதல் திருமணம். - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 6, 2017

எதிர்ப்பையும் தாண்டி நடந்து முடிந்த 82 மற்றும் 25 வயதுடைய காதல் திருமணம்.

மலாவி நாட்டில் தயோலோ நகரில் 25 வயதான பெண்ணை 82 வயதான முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மலாவியின் தயோலோ நகரை சேர்ந்த 82 வயதான ரியூபின்சன் சிந்துலி பொலிஸ் அதிகாரியாக வேலை செய்து கடந்த 1970ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.

சிந்துலி டோவா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது. பின்னர் முதல் மனைவி இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை சிந்துலி திருமணம் செய்து அவரை பிரிந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

சிந்துலி வீட்டுக்கு 25 வயதான ஜியோன் குவடானி என்ற திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான இளம் பெண் வீட்டு வேலைக்கு வந்துள்ளார். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். பேத்தி வயது பெண்ணை சிந்துலி காதலிப்பதற்கு ஊர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஜியோன் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவரை தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்ய சிந்துலி முடிவெடுத்தார். ஆனால் இதற்கு தேவாலய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து சிந்துலி கூறுகையில்...

"சட்டபூர்வமாக இருவரும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு பல தடைகள் வந்தபோதும் அதை எதிர்த்து இணைந்துள்ளோம். அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஜியோன் உள்ளார்" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment