தடையுத்தரவு எதிர் வரும் 15ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு. - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 6, 2017

தடையுத்தரவு எதிர் வரும் 15ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு.

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ் தாக்கல் செய்த மனுவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவின் தந்தை டீ. ஏ ராஜபக்‌ஷவிற்கு நினைவிடம் அமைப்பதற்கும், நினைவு காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கும் அரச நிதியை பயன்படுத்தியதாக தெரிவித்து குற்றவியல் விசாரணை பிரிவு கோட்டபாய ராஜபக்ஷ்விற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தது.

குறித்த குற்றச்சாட்டை எதிர்த்து கோட்டபாய ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கோட்டபாய தாக்கல் செய்த மனுவிற்கமைய அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரகசிய காவல் துறையினருக்கு இன்று வரை மேன்முறையீட்டு நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்ததடையுத்தரவு தொடர்ந்து நீடிப்பதா? நிராகரிப்பதா? தொடர்பிலான மீள்விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இன்று இடம்பெற்ற மீள் விசாரணையின் போதே குறித்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர் வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment