இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. 3 போட்டிகளைக் கொண்ட தொடரை, இந்திய அணி 1-0 என சுவீகரித்துக்கொண்டது.
டெல்லியிலுள்ள பெரோஸ் ஷா கொட்லா விளையாட்டரங்கில் இடம்பெற்ற, இன்றைய (06) இறுதி நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 410 ஓட்டங்களுக்காக, ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் உபாதை காரணமாக ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.
அறிமுக வீரரான ரெஷேன் சில்வா ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இந்திய அணி
536/7d & 246/5d
இலங்கை அணி
373 & 299/5
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக 243 ஓட்டங்கள் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸிற்காக 50 ஓட்டங்களை பெற்ற, இந்திய அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராத் கோலி போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இத்தொடரில் தனது துடுப்பாட்ட திறமையை வெளிக்காட்டிய விராத் கோலி தொடரின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் மொத்தமாக 610 ஓட்டங்களை அவர் பெற்றிருந்தார்.
No comments:
Post a Comment