சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கும், வீசா அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்தவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 14, 2021

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கும், வீசா அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்தவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்

(இராஜதுரை ஹஷான்)

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் டிஜிட்டல் (ஒரு வருடம் வரை) வீசா அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்தவதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகளாக நாடு நாடாக பயணித்து வாழ்ந்து வரும் நபர்கள் டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகள் என அழைக்கப்படுவர்.

அவ்வாறான சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை வழங்கல் சுற்றுலாத் துறையின் போக்காக அண்மைக் காலத்தில் வளர்ந்து வருகின்றது.

டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக உணவு விடுதிகள், பொது நூலகங்கள் மற்றும் அவ்வாறான இடங்களில் பொழுதுபோக்காக வாகனங்களில் இருந்து கொண்டே இணையத்தள வசதிகளுடன் உபகரணங்களைப் பயன்படுத்தி நிகழ்நிலை முறைமை வழியாக சில சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தொடர்பாடலுக்காக அதிதுரித இணையத்தள வசதிகள் இருத்தல் நீண்ட கால வீசா அனுமதிப்பத்திரம், இலாபகரமான தங்குமிட வசதிகள், வருமான வரிகளை விடுவித்தல் போன்றவை அவ்வாறான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கு ஏதுவான காரணிகளாக அமையும்.

டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளை எமது நாட்டுக்குக் கவர்ந்திழுத்தல், அதிக காலம் எமது நாட்டில் தங்கி வைத்திருப்பதற்கான வசதிகளை வழங்குவதன் மூலம் அதிகமான அந்நிய செலாவணியை எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கமைய டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும். டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்ட கால (ஒரு வருடம் வரை) வீசா அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad