எல்.பி.எல். தொடரின் 2 ஆம் பதிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் - மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

எல்.பி.எல். தொடரின் 2 ஆம் பதிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் - மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) டி-20 தொடரின் இரண்டாம் பதிப்பு முன்னதாக திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அதன்படி எல்.பி.எல். தொடரின் இரண்டாம் பதிப்பினை எதிர்வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது. இத் தொடரில் ஐந்து அணிகள் பங்கெடுக்கும்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் கடந்த ஆண்டு எல்.பி.எல். போட்டிகள் கண்டி டஸ்கர்ஸ், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைக்கிங்ஸ் மற்றும் காலி கிளடியேர்ட்டஸ் ஆகிய ஐந்து அணிகளின் பங்கு பற்றலுடன் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதனாத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த தொடரில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் ஆனது.

இந்த தொடர் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. 135 மில்லியனுக்கும் அதிகமானோர் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் வலைத்தளங்களில் இறுதிப் போட்டியை கண்டுகளித்தனர்.

போட்டிகள் மூடிய அரங்கத்திற்குள் உயிரியல் பாதுகாப்பு சூழலில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டும் சுகாதார அமைச்சின் முழு வழிகாட்டுதலின் கீழ் எல்.பி.எல். தொடரின் இரண்டாம் பதிப்பு பாதுகாப்பாக நடத்தப்படும் என்பதை இலங்கை கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad