அடுத்த வாரம் இரு நாட்கள் கூடவுள்ள பாராளுமன்றம் - துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பில் 05 ஆம் திகதி விவாதம் - ஒரு நாள் போதாதென எதிர்க்கட்சிகள் தெரிவிப்பு, மறுப்பு தெரிவித்த ஆளும் கட்சி - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

அடுத்த வாரம் இரு நாட்கள் கூடவுள்ள பாராளுமன்றம் - துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பில் 05 ஆம் திகதி விவாதம் - ஒரு நாள் போதாதென எதிர்க்கட்சிகள் தெரிவிப்பு, மறுப்பு தெரிவித்த ஆளும் கட்சி

கொவிட்-19 கவலைகள் இருந்தபோதிலும் எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டங்களை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாபா அபவேர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மே 5 புதன்கிழமை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தின்போது உத்தேச கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையக சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதத்தை மே மாதம் 5 ஆம் திகதி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மிக முக்கியமான சட்டமூலம் மீது ஒரே நாளில் விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்கு சகல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தியும் எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஆளும் கட்சியினர் நிராகரித்துள்ளனர்.

பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதன்போது கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன் சட்டமூலம் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்பு குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் மூலம் அறிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுடன் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி நடத்துவதற்கும் ஆளும் கட்சியினால் தீர்மானம் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது மிக முக்கியமான சட்டமூலமேனவும், இதனை ஒரு நாளில் விவாதம் நடத்தி நிறைவேற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், குறைந்த பட்சம் இரண்டு நாட்களேனும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

எனினும் அதற்கு ஆளும் கட்சியினர் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஒரே நாளில் விவாதத்தை நடத்தி நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அதில் மாற்றம் இல்லையெனவும் தெரிவித்துள்ளதுடன் கட்சி தலைவர் கூட்டத்தில் ஆளும் கட்சியின் தனித் தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை சகல எதிர்க்கட்சி உருபினர்களும் எதிர்த்துள்ளனர்.

மேலும் நாட்டின் தற்போதைய கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமையை அடுத்து இந்த வார பாராளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மே மாதம் 4ஆம், 5 ஆம் திகதிகள் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்.

இதன்போது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்வரும் 05ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை விவாதத்துக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார்.

அத்துடன், எதிர்க்கட்சியினர் முன்வைத்த யோசனைக்கு அமைய கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 04ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment