எகிப்தின் பாரோ பேரரசுக்கு முந்திய காலத்து கல்லறைகள் கண்டுபிடிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

எகிப்தின் பாரோ பேரரசுக்கு முந்திய காலத்து கல்லறைகள் கண்டுபிடிப்பு

நைல் டெல்டா பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறை தோன்றிய எகிப்தின் பாரோ பேரரசுக்கு முந்திய காலத்து கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர்.

அதேபோன்று எகிப்தின் மத்திய கால பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்து மேற்கு ஆசிய குடியேறிகள் நாட்டை கைப்பற்றிய ஹைக்சோஸ் காலத்து (கி.மு. 1650 தொடக்கம் 1500 வரை) கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் சுமார் கி.மு 3300 ஆண்டு ஆரம்பமான புடோ காலத்தின் 68 கல்லறைகள், கி.மு 3,100 ஆம் ஆண்டு வாக்கில் முதல் முறை தோன்றிய மூன்றாவது நகடா காலத்தின் ஐந்து கல்லறைகளும் உள்ளடங்குவதாக எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

கெய்ரோவின் வடக்காக டகாஹ்லி நிர்வாகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள் பண்டைய எகிப்தின் முக்கிய இரு நிலைமாற்றுக் காலங்களை காட்டுவதாக உள்ளது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் புடோ காலத்து கல்லறைகள் நீல் வட்ட வடிவான குழிகளில் கருவில் சிசு இருப்பது போன்று உடல்கள் வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நகடா காலத்தின் சில கல்லறைகளில் உருளைகள் மற்றம் பாதிரங்களில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad