ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கவும் - குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு அறிவித்தார் படைக்கல சேவிதர் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கவும் - குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு அறிவித்தார் படைக்கல சேவிதர்

தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய, பாராளுமன்ற படைக்கல சேவிதர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபை அமர்வு காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனால் காலை 9.30 அளவில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற கட்டட தொகுதிக்குள் அழைத்து வர வேண்டும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad