தேசியக் கொடியை 5 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

தேசியக் கொடியை 5 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பணிப்பு

அமெரிக்காவில், தேசியக் கொடியை 5 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கொவிட்-19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்தைக் கடந்துள்ளமை காரணமாக, இவ்விடயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தகவலை, அரச நிறுவனங்களுக்கு நேற்றைய தினம் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

கொரோனா தொற்றினால், சர்வதேச ரீதியில் அதிக பாதிப்பை அமெரிக்க எதிர்நோக்கியுள்ளமையால், அதனை எதிர்த்து, அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும், ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,822,364 ஆக பதிவாகியுள்ளதுடன், மரணித்தவர்களின் எண்ணிக்கை 512,477 ஐக் கடந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment