மூன்று விருப்பு வாக்கினையும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும், அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது : பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Sunday, August 2, 2020

மூன்று விருப்பு வாக்கினையும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும், அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது : பிரதமர் மஹிந்த

எதிர் தரப்பினரது போலியான ...
(இராஜதுரை ஹஷான்)

தேர்தலில் வாக்களிக்கும்போது, மக்கள் விருப்பு வாக்கினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது. எதிர்த்தரப்பினரது போலியான குற்றச்சாட்டுக்களுக்கு வாக்களார்கள் கவனம் செலுத்த வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை நகரில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசராக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 5000ம் ரூபாவை அரசாங்கம் மீள பெற்றுக் கொள்ளவுள்ளதாக போலியான செய்தி குறிப்பிடப்படுகிறது. மக்களுக்கு வழங்கிய நிவாரண நிதியை ஒருபோதும் மீள பெற்றுக் கொள்ளமாட்டோம் என்பதை நிதியமைச்சின் பொறுப்பில் இருந்து உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பெறுபேறுகள் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்ற வேண்டும். என்பதை பலமுறை காரணிகளுடன் எடுத்துரைத்துள்ளோம்.

தேர்தலில் வாக்களிக்கும் போது, மக்கள் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொள்ள வேண்டும். மூன்று விருப்பு வாக்கினையும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன். அரசாங்கத்துக்கு எதிராக எதிர்த்தரப்பினர் முன்வக்கும் போலியான குற்றச்சாட்டுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டாம்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஜனாதிபதியின் திட்டங்களை செயற்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். முரண்பாடுகளை தோற்றுவிக்கும் அரசாங்கம் தோற்றம் பெற்றால் எவ்வித பயனும் எத்தரப்பினருக்கும் கிடைக்கப் பெறாது. 

ஆகவே ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அஅரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment