மழை நீர் தேங்கியுள்ளதால் செம்மணி அகழ்வில் தடங்கல்கள் : அடுத்த வருடம் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 4, 2025

மழை நீர் தேங்கியுள்ளதால் செம்மணி அகழ்வில் தடங்கல்கள் : அடுத்த வருடம் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே (2026) 3ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 3ஆம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதன்போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment