லோரன்ஸ் செல்வநாயகம்
நாட்டில், இவ்வாண்டின் (2025) முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை, இறக்குமதி செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் வெளிநாட்டு செயல்திறன் அறிக்கைக்கு இணங்க, செப்டம்பரில் மாத்திரம் 286 மில்லியன் அமெரிக்கன் டொலருக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், நாட்டில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனிப்பட்ட மற்றும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்காக அதிகபட்ச தொகையானது கடந்த செப்டம்பர் மாதத்தில் செலவிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மாதாந்த தொகையானது, ஜனவரி 29.1 மில்லியன் அமெரிக்கன் டொலராகும்.
பெப்ரவரி 22.3 மில்லியன் அமெரிக்கன் டொலர் ,மார்ச் 54.0 மில்லியன் அமெரிக்கன் டொலர், ஏப்ரல் 145.6 மில்லியன் அமெரிக்கன் டொலர், மேயில் 125.2 மில்லியன் அமெரிக்கன் டொலர் ஜூன் 169.6 மில்லியன் அமெரிக்கன் டொலர், ஜூலை 206.0 மில்லியன் அமெரிக்கன் டொலர், ஆகஸ்ட் 255.7 மில்லியன் அமெரிக்கன் டொலர், செப்டம்பர் 286.0 மில்லியன் அமெரிக்கன் டொலர் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment