ஹஜ் சட்டமூலத்தை வரைய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
ஹஜ் சட்டமூலம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மேலும் தெரிவிக்கையில், “எனது ஆலோசனையின் பேரில் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் ஹஜ் சட்டமூலத்தை வரைவதற்கு தேவையான சிபாரிசுகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் அறிக்கை அண்மையில் என்னிடம் கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கையை உள்ளடக்கி ஹஜ் சட்டமூலத்தை வரைவதற்கான அனுமதியைக் கோரும் எனது அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, ஹஜ் சட்டமூலத்தை வரையும் நடவடிக்கையினை சட்ட வரைஞர் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அரசியலமைப்பிற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படவுள்ள இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் இணக்கத்துடன் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அச்சமயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினருடைய கருத்துக்களையும் நிச்சயம் பெறுவோம். இதன் பின்னரே குறித்த சட்டமூலத்தினை சட்டமாக்குவோம்” என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment