கருவாடு கடை என்ற போர்வையில் போதைப் பொருள் விற்பனை : இளைஞன் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, October 20, 2025

கருவாடு கடை என்ற போர்வையில் போதைப் பொருள் விற்பனை : இளைஞன் கைது

ஹம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அம்பாந்தோட்டை , குடாவெல்ல மோதரவத்த பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுயைடவர் ஆவார்.

சந்தேகநபரிடமிருந்து 22 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment