தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 8, 2025

தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

தேசிய கட்டிட ஆராச்சி நிறுவக சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்றையதினம் (7) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் 2025.08.19ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2025.09.23ஆம் திகதி விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தைப் புதிய சட்டத்தின் கீழ் ஸ்தாபிப்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும். 

மண்சரிவுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் புவி ஸ்திரமற்ற தன்மைக்கு உள்ளாகும்போது அந்தப் பகுதிகளை ஆராய்ச்சி செய்தல், மதிப்பாய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்து, நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்நிறுவனத்தின் முதன்மையான நோக்கமாகும்.

அத்துடன், அனர்த்தங்கள் ஏற்படாத வகையில் கட்டடங்கள் அமைக்கப்படுவதற்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் குறித்த துறையில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை என்பன இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

சட்ட திட்டங்களுக்கான இணக்கத்தைக் கண்காணித்தல், முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குதல் மற்றும் அனர்த்த எச்சரிக்கைக்கான வரைபடங்களைத் தயாரித்தல் ஆகியவை இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் அடங்குகின்றன.

அத்துடுன், இதன் நிர்வாக சபையின் அளவு மற்றும் நிர்வாகம், பணிப்பாளர் நாயகம் போன்ற பிரதான பணியாளர்கள் தொடர்பான தகுதிகள் மற்றும் அதன் முகாமைத்துவம், கணக்காய்வு உள்ளிட்ட நிறுவனத்தின் நிதி ஏற்பாடுகளும் இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டு 20ஆம் இலக்க தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமாக அமுலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment