அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவைகள் செயலிழப்பு : தொழில்நுட்ப சிக்கல்களால் இணைய சேவை பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 20, 2025

அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவைகள் செயலிழப்பு : தொழில்நுட்ப சிக்கல்களால் இணைய சேவை பாதிப்பு

அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை கட்டமைப்பு தொழில்நுட்ப சிக்கல்களால் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளது.

இந்த தகவலை அமேசன் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

அமெசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை செயலிழப்பால் பல நிறுவனங்களின் இணைய சேவை மற்றும் செயலிகளின் பயன்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்னாப் சாட், கென்வா, டூலிங்கோ, ரோப்ளாக்ஸ், அலெக்ஸா உள்ளிட்ட பல செயலிகளின் வேகம் குறைந்துள்ளதுடன் சில செயலிகள் முடங்கியுள்ளன.

இது அமேசன் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவாகும், இதனை சார்ந்து உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான இணையதளங்களும், சேவைகளும் செயல்படுகின்றன.

உங்கள் ஸ்மார்ட் கைப்பேசியில் உள்ள பல செயலிகள் அமேசன் வெப் சர்வீஸ் (AWS) தரவு மையங்களிலிருந்தே இயங்குகின்றன.

AWS இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், US-East-1 பிராந்தியத்தில் உள்ள அதன் சேவைகளில் திடீரென “கோரிக்கைகள் மீது உயர் விகிதத்தில் பிழைகள்” உணரப்படுவதாக கூறியுள்ளது.

No comments:

Post a Comment