தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 10, 2025

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை பெற்று விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment