அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம், ஆனால் சம்பள சூத்திரம் என்ன? : கேள்வி எழுப்பியுள்ள மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 12, 2025

அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம், ஆனால் சம்பள சூத்திரம் என்ன? : கேள்வி எழுப்பியுள்ள மனோ கணேசன்

இன்று, அடிப்படைச் சம்பளம் ரூ. 1,350 ஆகும். கேள்வி இதுதான். அரசு அடிப்படைச் சம்பளத்தை உயர்த்த உள்ளதா? அல்லது பிற மேலதிக கொடுப்பனவுகள் மூலம் ரூ. 1,750 வருகிறதா? ஜனாதிபதி முதலில் மூன்று அரச பெருந்தோட்ட நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு, பின்னர் தனியார் கம்பனிகளுடன் பேச வேண்டும் என மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் மேலும் கூறியதாவது, அடிப்படைச் சம்பளம் மட்டுமே EPF பங்களிப்புக்கு உட்பட்டது. கொடுப்பனவுகள் அல்ல.

கம்பனிகளின் நிலையான நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. தொழிலாளர்கள் அதிக கொழுந்து பறித்தால், கூடுதல் சம்பளம் வழங்கத் தயார். இதுதான் அவர்களின் சூத்திரம். “அதிக கொழுந்து, அதிக சம்பளம்”. ஜனாதிபதியின் சூத்திரமும் இதுவென்றால், இதில் புதியதொன்றும் இல்லை.

தொழிலாளர்கள் அதிக கொழுந்து பறிக்க முடியாததற்கு காரணம் என்ன? ஏனெனில் தோட்டங்கள் பல தசாப்தங்களாக பராமரிக்கப்படவில்லை. ஆகவே, கொழுந்து குறைந்துள்ளது.

தமுகூவின் நிலைப்பாடு, ஐ.ம.கூட்டணியுடனான எமது உடன்படிக்கையின்படி, தொழிலாளர்கள் பங்குதாரர்களாக மாற வேண்டும். இது சிறு தோட்ட கூட்டுறவுகள் மூலம் சாத்தியமாகும்.

இதில் அரசு, தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கிடையில் கூட்டு ஒப்பந்தம் உருவாக வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு.

No comments:

Post a Comment