நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா எம்.பி எதிர்வரும் நாட்களில் மொட்டுக் கட்சியில் இணைய வாய்ப்புகள் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனாவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தலைவராவார். என்னுடைய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. ஆக எங்களிடையே அரசியல் ரீதியான வேறுபாடுகள் உண்டு என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment