இன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடல் பகுதிகளில்
இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில், வங்காள விரிகுடாவில், உருவாகியுள்ள ‘மொந்தா’ சூறாவளி, இன்று (28) அதிகாலை 2.30 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கி.மீ தொலைவில், 14.4°வட அகலாங்கு மற்றும் 83.3° கிழக்கு நெட்டாங்கிற்கு அருகே மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு சார்ந்து, வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து கடுமையான சூறாவளி புயலாக வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 24 மணி நேரத்தில் காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென மீனவ சமூகங்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் .
சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 65 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55-60 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
கடல் நிலை
காங்கேசன்துறை முதல் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் சில நேரங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

No comments:
Post a Comment