இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 35 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மலேரியா எதிர்ப்பு பிரச்சார பிரிவு தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் மலேரியா இல்லாத நாடாக இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்மையில் பதிவான நோயாளர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என தேசிய மலேரியா எதிர்ப்பு பிரச்சார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நிலைமை தொடர்பில் தெரிவித்த மலேரியா எதிர்ப்பு பிரச்சார பிரிவின் ஆலோசகர் சமூக வைத்தியர் இந்தீவரி குணரத்ன, 071 284 1767 என்ற எண்ணைத் தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்கள் மலேரியா பற்றி மேலதிக தகவல்களைப் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment