கடலில் சிக்கிய கப்பல் பணியாளர்களை மீட்ட இலங்கை கடற்படை : இந்தியா, துருக்கி, அசர்பைஜானைச் சேர்ந்த 14 பேர் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 26, 2025

கடலில் சிக்கிய கப்பல் பணியாளர்களை மீட்ட இலங்கை கடற்படை : இந்தியா, துருக்கி, அசர்பைஜானைச் சேர்ந்த 14 பேர்

இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் பிரதான எஞ்சின்கள் செயலிழந்ததால், பாதிப்புக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான் நிலையிலிருந்த வணிகக் கப்பலான MV INTEGRITY STAR இன் பணியாளர்கள், கடற்படையினரால் வெற்றிகரமான மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீட்கப்பட்டு நேற்று (26) காலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த அறிவிப்பின் பேரில், இலங்கை கடற்படையினர், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், அந்தக் கடல் பகுதியில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படைக் கப்பலான INS சமுதுரவை அனுப்பியது.

இந்தியா, துருக்கி, அசர்பைஜான் நாட்டினரைக் கொண்ட MV INTEGRITY STAR வணிகக் கப்பலின் 14 பணியாளர்கள், சமுதுர கப்பலால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும், கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், பாதிக்கப்பட்ட வணிகக் கப்பலுக்கு உதவுவதற்காக MV MORNING GLORY என்ற வணிகக் கப்பல் கடல் பகுதியில் தயார் நிலையில் இருந்ததுடன், இதன் மூலம் கடல்சார் ஆபத்து ஏற்பட்டால் உதவி வழங்குவதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

ஒரு தீவு நாடான இலங்கையின் சர்வதேச கடமைகளுக்கு இணங்க, கடலில் ஆபத்தில் உள்ள கப்பல்கள் மற்றும் கப்பல்களில் கடல்சார் சமூகத்தின் உயிர்களை மீட்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினர், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கையைச் சேர்ந்த கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திலும், சர்வதேச நீரில் அருகிலுள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயங்களிலும் துன்பத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்திற்குத் தேவையான நிவாரணங்களை வழங்க தொடர்ந்து தயாராக உள்ளது.

No comments:

Post a Comment