2025.09.30ஆம் திகதி வரையில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானம் ரூ. 1,610,599 மில்லியன் என்றும், இதற்கு அமைய ரூ. 1,641,997 மில்லியன் (நூற்றுக்கு 102 வீதம்) சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
2025ஆம் ஆண்டு ஒட்டு மொத்த வரி வருமான இலக்கு ரூ. 2,195,220 மில்லியன் என்றும், இதில் ரூ. 1,641,997 மில்லியன் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் இது 75 வீதமென்றும் இங்கு தெரியவந்தது.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் 2025.10.08ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வரி வருவாய் இலக்குகள் மற்றும் வருமானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரி முகாமைத்துவம் உள்ளிட்ட வரி வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்கள், அதில் காணப்படும் சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினர் எதிர்பார்க்கும் மறுசீரமைப்புக்கள் குறித்த திட்டங்களை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வழிவகைகள் பற்றிய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.எச்.பெர்னாந்து உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment