O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 20, 2025

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2025 (2026) O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும்.

தேசிய அடையாள அட்டையை தம் வசம் கொண்டிராத தனியார் விண்ணப்பதாரர்கள் தமது தாய் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க முடியும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment