இலங்கை வந்தடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 7, 2025

இலங்கை வந்தடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்

“நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resillience” என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (07) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் குறித்து விவாதிக்கும் “நியேலினி” உலகளாவிய மாநாடு, உலகின் 102 நாடுகளைச் சேர்ந்த 500 விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) கண்டியில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment