அதிக மின்சார கட்டணத்திற்கு காரணம் திறனற்ற மின் சாதனங்களின் பயன்பாடு என இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபை (Sri Lanka Sustainable Energy Authority) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹர்ஷ விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்த தெரிவிக்கையில், ஆற்றல் இழப்பு பெரும்பாலும் திறனற்ற மின் சாதனங்களால் ஏற்படுகிறது.
இந்த இழப்பு பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.
ஆய்வுகளின்போது, இலங்கையில் உள்ள வீடுகளில் அதிக மின்சாரக் கட்டணத்திற்கு காரணமாக இருப்பது திறனற்ற மின் சாதனங்களின் பயன்பாடு ஆகும்.
இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளில் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக, மாதத்திற்கு 100 யூனிட்டுகளுக்கு மேல் மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது.
மேலும், இலங்கையில் திறனற்ற உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் காற்று சீரமைப்பிக்கும் (air conditioners) இதே விதி கடுமையாக்கப்படும் எனவும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹர்ஷ விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment