ஜப்பான் நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி அநுரகுமார - News View

About Us

About Us

Breaking

Friday, September 26, 2025

ஜப்பான் நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி அநுரகுமார

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி நேற்று (25) இரவு ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி, செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் வௌிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் கலந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment