சாமானியனுக்கு ஒரு சட்டம், அதிகாரமிக்கவர்களுக்கு ஒரு சட்டம் இஸ்லாத்தில் இல்லை : ஹக்கீமின் செயலை ஜ‌ம்மிய‌துல் உலமா கண்டிக்க வேண்டும் என்கிறார் முபாரக் அப்துல் மஜீத் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 21, 2025

சாமானியனுக்கு ஒரு சட்டம், அதிகாரமிக்கவர்களுக்கு ஒரு சட்டம் இஸ்லாத்தில் இல்லை : ஹக்கீமின் செயலை ஜ‌ம்மிய‌துல் உலமா கண்டிக்க வேண்டும் என்கிறார் முபாரக் அப்துல் மஜீத்

நூருல் ஹுதா உமர்

ஒரு கால‌த்தில் ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் எம்.எச்.எம்.அஷ்ர‌ப் பௌத்த ப‌ன்ச‌லைக்கு பூத்த‌ட்டு ஏந்தி சென்ற‌தை ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ண்டித்த‌ அகில இலங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மா, இப்போதைய‌ ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ரவூப் ஹக்கீம் ப‌கிர‌ங்க‌மாக‌ ஒரு ந‌டிகையை க‌ட்டிப்பிடித்து கொஞ்சுவ‌தை க‌ண்டிக்காம‌ல் மௌன‌மாக‌ இருப்ப‌து ஏன் என மூத்த உலமாவும், உலமா கட்சி தலைவருமான முபாரக் அப்துல் மஜீத் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும், அண்மையில் ந‌டைபெற்ற‌ ஐக்கிய தேசியக் கட்சியின் 79 வ‌து மாநாட்டின்போது க‌ல‌ந்துகொண்ட‌ குர்ஆன் ஹ‌தீதே எம‌து யாப்பு என‌ சொல்லிக்கொள்ளும் க‌ட்சியின் த‌லைவ‌ர் அங்கு நின்ற‌ முன்னாள் ந‌டிகையை (முன்னாள் எம்.பியும், கொழும்பு மாநகர முன்னாள் முதல்வருமான ரோஸி சேனநாயக்க) க‌ட்டிப்பிடித்து கொஞ்சினார். 

ப‌ல‌ மூத்த‌ மாற்று ம‌த‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் எவ‌ரும் செய்யாத‌ இச்செய‌லை ர‌வூப் ஹ‌க்கீம் விழுந்த‌டித்து காணாத‌தை க‌ண்ட‌து போன்று க‌ட்டிப்பிடித்தார். 

துருக்கிய‌ ஜ‌னாதிப‌தியின் ம‌னைவி சீன‌ அதிப‌ருக்கு கை கொடுக்காம‌ல் விட்ட‌தை பெரிதாக‌ சமூக வலைத்தங்களில் பதிவிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் கட்சியின் ச‌மூக‌ வ‌லைத்தள போராளிக‌ள் கூட‌ மௌன‌மாக‌ இருக்கிறார்க‌ள்.

அதிகார‌த்தில் இருப்போருக்கு ஒரு ச‌ட்ட‌ம், சாமான்ய‌ ம‌க்க‌ளுக்கு ஒரு ச‌ட்ட‌ம் என்ப‌து இஸ்லாத்தில் இல்லை. ஆக‌வே ர‌வூப் ஹ‌க்கீமின் இத்த‌கைய‌ அசிங்க‌மான‌ செய‌லை அகில இலங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மா க‌ண்டிக்க‌ முன்வ‌ர‌ வேண்டும். அப்போதுதான் இது அசிங்க‌மான‌ செய‌ல் என்ப‌தை இன்றைய‌ த‌லைமுறை புரிந்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment