யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை : ஜனாதிபதிக்கு சமூகவலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, September 1, 2025

யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை : ஜனாதிபதிக்கு சமூகவலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) திறந்து வைக்கப்பட்ட குடிவரவு, குடியகல்வு திணக்களத்தின் உத்தியோகபூர்வ நினைவுப் படிகத்தில் தமிழ் மொழிக்கு முதலிடமளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (01) இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதன் பலகையில், ஜனாதிபதியால் இவ்வலுவலகம் திறக்கப்பட்டதென தமிழில் எழுதப்பட்டுள்ளது. 

நாட்டில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் அரச மொழிகளாக உள்ளபோதும், தமிழுக்கு இதுவரையும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. 

இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,தமிழுக்கு உரிய இடம் வழங்கியுள்ளதாக பலரும் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் யாழில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த ஜனாதிபதிக்கு சமூகவலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனைத் திறந்து வைக்கும் நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன் மற்றும் சி்விகே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment