இஸ்ரேல் வேலை வாய்ப்பு விதிமுறை முறைகேடுகளில் முன்னாள் அமைச்சரும் சம்பந்தம் : விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் என்கிறார் வெளிநாட்டு பிரதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 9, 2025

இஸ்ரேல் வேலை வாய்ப்பு விதிமுறை முறைகேடுகளில் முன்னாள் அமைச்சரும் சம்பந்தம் : விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் என்கிறார் வெளிநாட்டு பிரதி அமைச்சர்

(எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்காக இணைத்துக் கொள்ளும் விதிமுறைகளில் கடந்த காலங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த முறைகேடுகளில் விடயத்துக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சரும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவருகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருன் ஹேமசந்திர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர் அரவிந்த செனரத் எம்.பி, இஸ்ரேலுக்கான தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளும விதிமுறைகளில் கடந்த காலங்களில் முறைகேடுகள் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா? அவ்வாறு இடம்பெற்றிருந்தால், எதிர்காலத்தில் அவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்காக இணைத்துக் கொள்ளும் விதிமுறைகள், கடந்த காலத்தில் முறைகேடான முறையிலே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சிலர் தொழில் வாய்ப்புக்காக பெயர்ப் பட்டியலை அவர்களே தயாரித்துக் கொண்டு செயற்பட்டுள்ளனர். அப்போது இதற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் உள்ளிட்ட ஒரு தரப்பே இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக தற்போது நிரூபிக்கப்பட்டிருக்குறது.

இது தொடர்பில் ஊழல் மோசடி விசாணை ஆணைக்குழு முறையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக எமக்கு தகவல் வந்திருக்கிறது. இந்த விசாரணை விரைவாக நிறைவடைந்து, கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் எடுக்க இருக்கும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படுத்த முடியுமாகும்.

அதேபோன்று இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்காக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மூன்றாம் தரப்பினர் இதில் தலையிட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இரண்டு அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்களின் பிரகாரமே தொழில் வாய்ப்புக்களுக்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மோசடி இடம்பெற்றிக்கிறது.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வு விசாரணை பிரவும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு உரித்தான பீபா நிறுவனத்தை சம்பந்தப்படுத்திக் கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம் இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுவரும் மூன்றாம் தரப்பினரை இனம்கண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment