பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, September 29, 2025

பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள முரண்பாடுகள், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர், சிலேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. ஆனால் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்களின் பற்றாக்குறை தற்போது கடுமையான நிலையில் காணப்படுகின்றது. பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளனர்.

இதனால் பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment