இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
அந்த வகையில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 56 இலட்சத்து 34 ஆயிரத்து 915 வாக்குகளைப் பெற்று அவர் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.
அதற்கிணங்க கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார்.
இந்த ஒரு வருட காலத்தை வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையிலான இடைவெளி குறைவடைந்த காலமாக குறிப்பிட முடியும் என்பதுடன் முதல் ஆறு மாத காலங்களில் மாத்திரம் நாட்டின் வருமானம் ரூ. 3221 பில்லியன் ஆகும்.
சுற்றுலாத் துறை வருமானம் வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு அந்நிய செலாவணி, ஏற்றுமதி மற்றும் சுங்க வருமானம் உள்ளிட்ட துறைகளின் வருமானங்கள் இக்காலத்தில் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட முடியும்.
அரச நிறுவனங்களைப் பலப்படுத்தி சட்ட ஆதிபத்தியத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு வேலைத் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குறிப்பாக போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எதிராக சுற்றி வளைப்புக்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment