நேபாளத்தில் பிரதமர், அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 9, 2025

நேபாளத்தில் பிரதமர், அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைப்பு

நேபாளத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் பலியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு நீக்கியுள்ளது. 

ஆனாலும், இளைஞர்களின் போராட்டம் தொடரும் நிலையில், நேபாள அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்து வருகின்றனர்.

இதுவரை 3 அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், இன்று (09) மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் கே.பி. ஒலி அழைப்பு விடுத்துள்ளார்.
நேபாளத்தில் பிரதமர் இல்லம், அரசு அலுவலகங்கள், அமைச்சர்கள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பிருத்வி சுபா வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. ஆளும் கட்சி நிர்வாகி பகதுர் வீட்டின் மீதும் அவரின் 10 இற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும் ஆர்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது.

முன்னதாக உள்நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என 26 சமூக ஊடகத் தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருந்தது. 

இந்த தடையை நீக்கவும் ஊழலைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. 
“ஜென் Z இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு அமைச்சர்கள் தற்போது வரை இராஜினாமா செய்துள்ளனர்.

நேபாளத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் பலியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு நீக்கியுள்ளது. 

ஆனாலும், இளைஞர்களின் போராட்டம் தொடரும் நிலையில், நேபாள அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment