பாறுக் ஷிஹான்
ஸஹ்ரான் ஹஷீமின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் இன்று முன்னிலையானார்.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் கடந்த இரு தினங்களாக (01-02) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹஷீமின் மனைவி பாத்திமா ஹாதியா ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வாறு மன்றில் முன்னிலையான ஸஹ்ரான் ஹஷீமின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் இதுவரை காலமும் இடம்பெற்ற வழக்குத் தொடரின் குறிப்புகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டுள்ளன.
குறித்த அவரது வழக்கு தொடர்பான விசாரணை குறிப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சி ஹேரத்தும் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரனும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
இதன்போது தமிழ் மற்றும் சிங்கள குறிப்புகளில் காணப்பட்ட மாறுபாடுகளை சுட்டிக்காட்டிய அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார்.
பிரதிவாதியான ஸஹ்ரான் ஹஷீசிமின் மனைவி பாத்திமா ஹாதியா சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி ஷரீப் சலாவுதீன் இதன் போது எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்க வில்லை.
அத்துடன் குறித்த விசாரணை குறிப்புகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நேரத்தை கருத்தில் கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை வழக்கு மீள்தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்கதக்து.
No comments:
Post a Comment