கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (20) மாலை தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்திற்கு சொந்தமான 2 பெல் ரக ஹெலிகொப்டர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் 12 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டடமொன்றில் மூன்றாம் மாடியில் உள்ள மின் உபகரண வர்த்தக நிலையத்திலேயே இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டதுடன் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட நேரம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இராணுவத்தின் பெல் ரக ஹெலிகொப்டர்களும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்புப் படையினரும், பொலிஸாரும் தெரிவித்தனர்.
அதேவேளை தகவல் கிடைத்தவுடன் உடனடியாகவே இராணுவத்தின் வாகனங்கள் மற்றும் 2 ஹெலிகொப்டர்களையும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அனுப்பியதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
சேத விபரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தீ அனர்த்தத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தீ அனர்த்தத்திற்கு மின் ஒழுக்கே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment