(இராஜதுரை ஹஷான்)
பொதுச் சொத்துக்களை தீ வைத்து இல்லாதொழித்த மக்கள் விடுதலை முன்னணி பொதுச் சொத்து சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்துள்ளமை வரலாற்றில் கேலிக்கூத்தானதொரு செயற்பாடாகும். அரசியலமைப்புடனான சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குறைந்தப்பட்சம் வாக்குமூலம் கூட பெற்றுக் கொள்ளப்படவில்லை.
சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கணக்காய்வு குழு பரிந்துரைத்துள்ளது.
சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை குறிப்பிட்டுக் கொண்டு நேரடியாக அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அழைப்பு விடுத்த நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தனிப்பட்ட பயணங்களுக்கு அரச நிதி பயன்படுத்தப்படுவதில்லையா?
பொதுச் சொத்துக்களை தீவைத்து இல்லாதொழித்த மக்கள் விடுதலை முன்னணி பொதுச் சொத்து சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்துள்ளமை வரலாற்றில் கேலிக்கூத்தானதொரு செயற்பாடாகும் என்றார்.
No comments:
Post a Comment