முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை இரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் உடனடியாகவே தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவார் என நாமல் ராஜபக்ஷ எம்பி தெரிவித்துள்ளார்.
எந்த சொத்தும் நாம் பலவந்தமாக பெற்றுக் கொண்டதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிகள் அதிகாரத்தில் உள்ள காலத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் காரணமாக அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே பின்னர் பிரச்சினைகள் எழலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், அவர்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்றும் புதிய ஜனாதிபதி மேற்கொண்டுள்ள மேற்படி தீர்மானம் எதிர்காலத்தில் அவருக்கே பாதகமாக அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment