தொடர்ந்தும் விளக்கமறியல் பிரசன்ன ரணவீர - News View

About Us

About Us

Breaking

Monday, August 18, 2025

தொடர்ந்தும் விளக்கமறியல் பிரசன்ன ரணவீர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹர நீதவான் காஞ்சனா என் சில்வா முன்னிலையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிரிபத்கொட பகுதியில் போலி பத்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்க நிலத்தை விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மே 07ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment