ஓட்டமாவடியில் இறங்குதுறை, படகு திருத்தும் நிலையம் மற்றும் குளிரூட்டப்பட்ட மீன் களஞ்சியசாலை : நடவடிக்கை மேற்கொண்டுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 16, 2025

ஓட்டமாவடியில் இறங்குதுறை, படகு திருத்தும் நிலையம் மற்றும் குளிரூட்டப்பட்ட மீன் களஞ்சியசாலை : நடவடிக்கை மேற்கொண்டுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸினால் கடந்த 16.07.2025 ம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் மூன்று இறங்குதுறைகள், மீன்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை மற்றும் மீன்பிடிப் படகுகள் திருத்தும் நிலையம் என்பன அமைப்பதற்கான அனுமதி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மூன்று இறங்குதுறைகள், மீன்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை மற்றும் மீன்பிடி படகுகள் திருத்தும் நிலையம் என்பவற்றை அமைப்பதற்கான இடத்தை அடையாளப்படுத்தும் நோக்கில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் ஆகியோர் தலைமையில் நேற்று (15) கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ஏ.அமீர், சபையின் தொழிநுப்ட உத்தியோகத்தர் ஏ.அமல்ராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில், ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொருத்தமான இடங்கள் பார்வையிடப்பட்டதுடன், ஓட்டமாவடி பொது மைதானத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள ஆற்றோரம் பொருத்தமான இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குறித்த இறங்குதுறையின் வடிவமைப்பு, தேவையான உபகரணங்கள், செலவீனங்கள் தொடர்பிலும் தொழிநுட்ப அறிவினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு தவிசாளர் தலைமையிலான குழுவினர் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு துறைமுக முகாமையாளரிடம் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.

உலக நாணய நியத்தின் திட்டத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர், ஊழியர்களின் மாதாந்தச் சம்பளக் கொடுப்பனவின் 20% ஐ உள்ளூராட்சி மன்றங்கள் பங்களிப்புச் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகேயிடம் தவிசாளரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மேற்படி திட்டங்களுக்கான அனுமதி கிடைக்கப் பெற்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் பெறப்படும் வருமானத்தை கொண்டு உலக நாணய நிதியத்தின் குறிக்கோளை அடைந்து கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் மிக விரைவில் இதற்கான திட்டமொழிவுகள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார்.

அத்துடன், சபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தவிசாளரினால் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment