முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2014.12.26 முதல் 2015 ஜனவரி வரை வெள்ள நிவாரணத்திற்கான பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ. 6.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று (21) குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டன.
குற்றப்பத்திரம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அதனை பரிசீலித்த நீதிபதி அவர்களை பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
மேலும், அவர்களின் கைரேகைகளை எடுக்கவும், முந்தைய குற்றப் பதிவுகளை விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் முழு விசாரணையும் ஒக்டோபர் 01ஆம் திகதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment