நவம்பரில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் : உரை, விவாத திகதி பின்னர் அறிவிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

நவம்பரில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் : உரை, விவாத திகதி பின்னர் அறிவிக்கப்படும்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 07ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 2ஆவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான உரை மற்றும் அதன் மீதான விவாதம் தொடர்பில் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு பாராளுமன்ற செயலாளருக்கு நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எம்.எம்.சி.பி மொஹொட்டிகெதர கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment