இடைநிறுத்தப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் e சேவைகள் - News View

About Us

About Us

Breaking

Monday, July 7, 2025

இடைநிறுத்தப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் e சேவைகள்

தேர்தல் ஆணைக்குழுவின் இலத்திரனியல் (e-Service) சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (07) முதல் ஆணைக்குழுவின் e சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இணையவழி பதிவு, இணைய வழியில் வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் உள்ளிட்ட அனைத்து இணைய வழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment