நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 12, 2025

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்

இந்தியாவின், ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் கோட்டா சீனிவாசராவ் தனது 83 வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (13) உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2003 இல் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தமிழகமெங்கும் பிரபலமானவர்.

மேலும், "திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர்.

இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது.

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ்.

இப்படி பல படங்களை நடித்து இவர், கடந்த, 2023 ஆம் ஆண்டுடன் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

No comments:

Post a Comment