புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் துப்பாக்கியுடன் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, July 21, 2025

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் துப்பாக்கியுடன் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ரமேஷ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷைத் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment