பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரா - டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மீதி விமானம் மோதி வெடித்து தீப்பிடித்துள்ளது.
பயிற்சி விமானம் மதியம் 1.06 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.
மதிய உணவு இடைவேளையின் போதே விமானம் கல்லூரி உணவகத்தின் கூரை மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது அங்கு மாணவர்கள் பலர் இருந்துள்ளனர்.
சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்துக்குள்ளான F-7 BGI விமானம் விமானப்படைக்கு சொந்தமானது என்பதை பங்காளதேஷ் இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment