பொரளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை கனத்த சுற்றுவட்ட பகுதியிலுள்ள மின் சமிக்ஞைக்கு அண்மையில் பாரந்தூக்கி வாகனம் அதன் சுக்கான் செயலிழந்த நிலையில் நிறுத்த முடியாமல் 40 மீட்டர் தூரம் வரை சென்றிருந்தது.
குறித்த வாகனம் மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும் ஜீப்புடனும் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாரந்தூக்கி வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment